சிறு விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6 ஆயிரம் நிதி உதவி வழங்கும் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி உத்தர பிரதேசத்தில் தொடங்கி வைத்தார்.
5 ஏக்கருக்கு குறைவாக நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கப்படும் என்று மத்திய அரசின் இடைக்கால மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. இந்த தொகை தலா 2 ஆயிரம் வீதம் 3 தவணையாக விவசாயிகளின் வங்கி கணக்கில் செலுத்தப்பட உள்ளது. இத்திட்டத்திற்கு பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டம் என பெயரிடப்பட்டுள்ளது. அனைத்து மாநிலங்களிலும் இந்த திட்டத்தில் பயன் அடையும் விவசாயிகளை கணக்கெடுக்கும் பணி நடந்து வந்தது. இதையடுத்து முதல் தவணையாக 2 ஆயிரம் ரூபாய் நிதி வழங்கும் திட்டத்தை உத்தர பிரதேச மாநிலம், கோரக்பூரில் பிரதமர் நரேந்திர மோடி முறைப்படி தொடங்கி வைத்தார். இதில் உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், பாஜக மூத்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Discussion about this post