இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனாவால் 21 பேர் உயிரிழப்பு! 6,000-க்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

corona india

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 6 ஆயிரத்து 168 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், மருத்துவ பரிசோதனையில் 6 ஆயிரத்து 168 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பாதித்தவர்களில் 59 ஆயிரத்து 210 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றும், கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 9 ஆயிரத்து 685 பேர் குணமடைந்துள்ளனர் எனவும் கூறப்பட்டுள்ளது. மேலும் கொரோனா பாதிப்பால் கடந்த 24 மணி நேரத்தில் 21 பேர் உயிரிழந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

Exit mobile version