கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே 6 வயது சிறுமி குங்பு, சிலம்பம், யோகா உள்ளிட்ட கலைகளில் அசத்தி வருகிறார். ஓசூர் அடுத்த சப்படி கிராமத்தை சேர்ந்த பவித்ராமன், அனிதா தம்பதியினருக்கு ஸ்வேதா ஸ்ரீ, மேகாஸ்ரீ என இரண்டு குழந்தைகள் உள்ளனர். பவித்ராமன் சிலம்ப பயிற்சியாளராக உள்ளார். பவித்ராமன் பயிற்சிக்கு செல்லும் போது மூத்த மகள் ஸ்வேதா ஸ்ரீயை அழைத்து செல்வதை வழக்கமாக வைத்திருந்தார். இவர் மற்றவர்களுக்கு பயிற்சி அளிப்பதை பார்த்த சிறுமி தானாகவே சிலம்பம் பழக முயற்சித்து வந்தார். இதனை பார்த்த பவித்ராமன் சிறுமிக்கு பயிற்சியளிக்க ஆரம்பித்து அவரிடம் பயிலும் மாணவர்கள் பிற இடங்களில் பங்கேற்கும் போட்டிகளில் ஸ்வேதா ஸ்ரீயையும் பங்கேற்க வைத்துள்ளார்.கடந்த ஆண்டு மார்ச் மாதம் பயிற்சியை துவங்கிய ஸ்வேதா ஸ்ரீ சிலம்பாட்டத்தை கற்க துவங்கிய சில மாதங்களிலேயே நன்கு தேரியவராக இருந்தார். தொடர்ந்து மாவட்ட அளவிலான, மாநில அளவிலான போட்டிகள் அனைத்திலும் முதலிடம் பிடித்ததுடன், தேசிய அளவிலான நடைபெற்ற சிலம்ப போட்டிகளிலும் முதல்பரிசை பெற்றுள்ளார்.
Discussion about this post