கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் கெலவரப்பள்ளி அணையில் 6 காட்டு யானைகள் தஞ்சமடைந்திருப்பதால் அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். ஓசூர் அடுத்த அத்திமுகம் அருகில் 6 காட்டு யானைகள் சுற்றி திரிந்து வந்தது. இந்நிலையில் இரவோடு இரவாக அவை கெலவரப்பள்ளி அணைக்கு வந்துள்ளன. கெலவரப்பள்ளி அணையின் அருகே விவசாயம் செய்து வரும் விவசாயிகள் நிலங்களை யானைகள் நாசப்படுத்த வாய்ப்புள்ளதாக அச்சமடைந்துள்ளனர்.
காட்டுயானைகள் அணையில் நீரில் குளியலிட்டு வரும் நிலையில் வெயில் காரணமாக யானைகளை விரட்டுவது கடினமென கூறியுள்ள வனத்துறையினர் யானைகளின் நடவடிக்கைகளை கண்காணித்து வருகின்றனர். மேலும் அணையில் யானைகள் இருக்கின்ற தகவல் பரவியதால் பொதுமக்கள் ஆர்வமுடன் குவிந்து வருகின்றனர்.
இதனையடுத்து ஆபத்தை உணராமல் யானைகளின் அருகில் செல்ல வேண்டாமென்று கூறியுள்ள வனத்துறையினர் ஆவலப்பள்ளி, நந்திமங்கலம் உள்ளிட்ட 10க்கும் மேற்ப்பட்ட கிராம மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளனர்.
Discussion about this post