இலங்கை கிளிநொச்சியில் சந்தேகப்படும்படியாக நடமாடிய 6 இளைஞர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
இலங்கையில் நடைபெற்ற குண்டு வெடிப்பைத் தொடர்ந்து இலங்கை முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பல்வேறு இடங்களில் ராணுவத்தினர் மற்றும் காவல்துறையினர் தீவிர சோதனைகளையும் நடத்திவருகின்றனர். இந்த நிலையில் இலங்கை கிளிநொச்சியில் சந்தேகப்படும்படி நடமாடிய 6 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து 6 பேரும் கைது செய்யப்பட்டிருப்பதாக பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட 6 பேருக்கும் சில இஸ்லாமிய அமைப்புகளுடன் தொடர்பு இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
Discussion about this post