தமிழகத்திலிருந்து மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 6 எம்பிக்களும் இன்று பதவியேற்றுக் கொண்டனர். அதிமுக சார்பில் மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கபட்ட சந்திர சேகரன், முகமது ஜான் ஆகியோர் தமிழில் பதவியேற்றுக் கொண்டனர். இதேபோல் திமுக கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த மூன்று எம்பிக்களும் பதவியேற்றனர். மாநிலங்களவைத் தலைவரும் துணைக்குடியரசுத் தலைவருமான வெங்கையா நாயுடு அவர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். அதிமுக கூட்டணி சார்பில் எம்பியாக தேர்ந்து எடுக்கப்பட்ட அன்புமணி ராமதாஸ் நாளை பொறுப்பேற்றுக் கொள்கிறார்.
Discussion about this post