நாமக்கல் பச்சிளம் குழந்தைகள் விற்பனை தொடர்பான வழக்கில், 6 பேரின் ஜாமீன் மனுக்கள் இரண்டாவது முறையாக தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் குழந்தைகள் விற்பனை செய்யப்பட்ட வழக்கில், ஓய்வு பெற்ற செவிலியர் அமுதவள்ளி, அவரது கணவர் ரவிச்சந்திரன், ஆம்புலன்ஸ் ஓட்டுநர் முருகேசன் உள்ளிட்ட 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் இந்த வழக்கின் முக்கிய குற்றவாளிகளான அமுதா, ரவிச்சந்திரன், உள்ளிட்ட 7 பேர் ஜாமின் கோரி நாமக்கல் முதன்மை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இது தொடர்பாக விசாரணை நடத்திய நீதிபதிகள் 6 பேரின் ஜாமின் மனுக்களைத் தள்ளுபடி செய்தனர். ஆம்புலன்ஸ் ஓட்டுநர் முருகேசனின் ஜாமீன் மனு மட்டும் பரிசீலனையில் உள்ளது. ஏற்கனவே கடந்த 16 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது 2வது முறையாகவும் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post