நாமக்கல் மாவட்டத்தில் பயிர் கடன் வழங்கியதாக ரூ.2,40,00,000 மோசடி செய்த 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு தாலுகா, மல்லசமுத்திரத்தில் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கத்தில், பயிர் கடனில் மோசடி செய்திருப்பதாக புகார் எழுந்துள்ளது. இதையடுத்து, டி.எஸ்.பி செல்வராஜ் தலைமையினான காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்டு வரை விவசாயிகளுக்கு பயிர் கடன் வழங்கியது போல் போலி ஆவணம் தயாரித்து சுமார் ரூ.2,40,00,00 மோசடி செய்திருப்பது தெரியவந்தது.
இதையடுத்து சங்கத்தின் தற்போதைய செயலாளர் ரவி, சங்க பணியாளர்கள் கதிர்வேல், தங்கராஜ், ராவுத்தன், கம்பராயன், தங்கவேல் ஆகிய 6 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். இந்த விவகாரத்தில் தலைமறைவாக உள்ள சங்கத்தின் முன்னாள் தலைவர் சபரி உள்ளிட்ட 7 பேரை தேடி வருகின்றனர்.