ஏழு மாநிலங்களில் உள்ள 51 மக்களவை தொகுதிகளில் நடைபெற்ற 5ம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு வெற்றது. மக்களவைக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. 4 கட்ட தேர்தல் நிறைவுபெற்ற நிலையில், 5வது கட்டமாக உத்திரப் பிரதேசம், ராஜஸ்தான், மேற்கு வங்கம், மத்தியப் பிரதேசம், பிகார், ஜார்க்கண்ட், ஜம்மு- காஷ்மீர் ஆகிய 7 மாநிலங்களில் உள்ள 51 மக்களவை தொகுதிகளில் வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணிக்கு நிறைவு பெற்றது. நாடு முழுவதும் 96 ஆயிரத்து 88 வாக்குச் சாவடி மையங்கள் அமைக்கப்பட்டது. பதட்டமான வாக்கு மையங்களுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டது. விறுவிறுப்பாக நடைபெற்ற வாக்குப் பதிவில், அரசியல் தலைவர்கள், பிரபலங்கள், பொதுமக்கள் ஆர்வமுடன் தங்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்றினர். மாலை 5.30 மணி நிலவரப்படி ஒட்டுமொத்தமாக 59.15 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
அதிகபட்சமாக மேற்கு வங்கத்தில் 74.06 சதவீத வாக்குகளும், குறைந்த பட்சமாக ஜம்மு காஷ்மீரில் 17.07 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன. உத்தரபிரதேசத்தில் 52.97 சதவீத வாக்குகளும், பீகாரில் 52.86 சதவீத வாக்குகளும் ராஜஸ்தானில் 59.14 சதவீத வாக்குகளும் மத்திய பிரதேசத்தில் 62.45 சதவீத வாக்குகளும் ஜார்கண்டில் 63 சதவீத வாக்குகளும் பதிவாகி உள்ளன.
Discussion about this post