நியூசிலாந்துக்கு எதிரான கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் அடுத்தடுத்து விக்கெட்டுக்களை இழந்து இந்திய அணி தடுமாறி வருகிறது.
இரு அணிகளுக்கு இடையேயான 5வது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி வெலிங்டனில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக ரோஹித் ஷர்மா மற்றும் சிஹர் தவான் களமிறங்கினர். கடந்த போட்டியைப் போன்றே இந்த போட்டியிலும் ஆரம்பம் முதலே இந்திய அணி விக்கெட்டுகளை இழந்தது. கேப்டன் ரோஹித் சர்மா 2 ரன்களில் ஆட்டமிழந்தார். தவான் 6 ரன்களிலும், சுப்மான் கில் 7 ரன்களிலும், தோனி 1 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.13 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 32 ரன்கள் எடுத்துள்ளது.
Discussion about this post