பொதுவாக விவாகரத்து வழக்குகளில் கணவன், மனைவி பிரியும் போது கணவன் மனைவி மற்றும் குழந்தைகளின் எதிர்காலத்தின் நலன் கருதி ஜீவனாம்சமாக குறிப்பிட்ட அளவிலான தொகை அளிப்பது வழக்கம்.
ஆனால் பஞ்சாபில் நடைபெற்ற விவாகரத்து வழக்கு ஒன்றில் வித்தியாசமான தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அமித் மெஹ்ரா- மஞ்சு தம்பதி விவாகரத்து கேட்டு வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி ராஜ் சேகர் அத்ரி குறிப்பிட்ட தொகையை ஜீவனாம்சமாக அளிக்க உத்தரவிட்டார். ஆனால் பணத்திற்கு பதிலாக 20 கிலோ அரிசி,5 கிலோ அளவில் சர்க்கரை, வெவ்வேறு பருப்பு வகைகள், நெய் 15 கிலோ கோதுமை வழங்க தயாராக இருப்பதாக அமித் மெஹ்ரா கூறியுள்ளார். இதனுடன் 4 மாதங்களுக்கு ஒருமுறை ஆடைகள், தினமும் 2 லிட்டர் பால் ஆகியவையும் வழங்குவதாக தெரிவித்தார்.
அவரது கருத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதி அடுத்த 3 நாட்களுக்குள் இதனை வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.
Discussion about this post