தமிழகத்தில் மேலும் 5,967 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதனையடுத்து நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 85 ஆயிரத்து 352 ஆக அதிகரித்துள்ளது. நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட 5,967 பேரில் 3,611 ஆண்களுக்கும், 2,356 பெண்களுக்கும் தொற்று உறுதியாகி உள்ளது. தலைநகர் சென்னையில் ஒரே நாளில் 1,277 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து, பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1 லட்சத்து 26 ஆயிரத்து 677 ஆக உயர்ந்துள்ளது. சென்னை தவிர்த்து பிற மாவட்டங்களில் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதன்படி, கோவை மாவட்டத்தில் 387 பேருக்கும், கடலூரில் 370 பேருக்கும், திருவள்ளூரில் 320 பேருக்கும் நோய் தொற்று உறுதிச் செய்யப்பட்டுள்ளது. செங்கல்பட்டில் 306 பேருக்கும், சேலத்தில் 273 பேருக்கும் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. ஒரே நாளில் 6,129 பேர் குணமடைந்துள்ள நிலையில், தமிழகத்தில் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 3 லட்சத்து 25 ஆயிரத்து 456 ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தோர் விகிதம், 84 புள்ளி 45 சதவீதமாக அதிகரித்துள்ளது. மேலும், 97 பேர் உயிரிழந்த நிலையில், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 6,614 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 53,282 பேர் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
Discussion about this post