மேலூர் அருகே நூற்றுக்கணக்கான வாழை மரங்களை மர்ம கும்பல் வெட்டி சாய்த்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள வடக்குவலையபட்டியில் ஜெயபால் என்பவருக்கு சொந்தமான 40 செண்ட் நிலத்தில் பயிரிடப்பட்டிருந்த நூற்றுக்கணக்கான வாழை மரங்கள் வெட்டி சாய்க்கப்பட்டுள்ளது. அறுவடைக்கு தயாராகி வந்த வேளையில் அனைத்து மரங்களும் வெட்டி சாய்க்கப்பட்டதால் சோகமடைந்த ஜெயபால் இதுகுறித்து கீழவளவு காவல்நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்ததில் ஜெயபாலுக்கும் பக்கத்து ஊரை சேர்ந்த மகாராஜா என்பவருக்கும் பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சனை இருந்ததாகவும் அதில் ஜெயபாலின் நிலத்தை மகாராஜாவிடம் விற்றதாக கூறப்படுகிறது. எனவே சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் தடயங்களை சேகரித்து முன்விரோதம் காரணமாக மகாராஜா இதனை செய்தாரா அல்லது வேறு யாரும் செய்தனரா என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.
Discussion about this post