சென்னையில் 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 56 ரூபாய் அதிகரித்து 34 ஆயிரத்து 344 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
நாளுக்கு நாள் ஏற்ற இறக்கத்தை சந்தித்து வரும் தங்கத்தின் விலை இன்று சற்று அதிகரித்து விற்பனையாகிறது. அந்த வகையில், 24 கேரட் தங்கத்தின் விலை கிராமுக்கு 7 ரூபாய் அதிகரித்து 4 ஆயிரத்து 681 ரூபாய்க்கும், சவரனுக்கு 56 ரூபாய் அதிகரித்து 37 ஆயிரத்து 448 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 7 ரூபாய் அதிகரித்து 4 ஆயிரத்து 293 ரூபாய்க்கும், சவரனுக்கு 56 ரூபாய் அதிகரித்து 34 ஆயிரத்து 344 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
இதேபோல் வெள்ளி கிராமுக்கு 1 ரூபாய் 10 காசுகள் அதிகரித்து 73 ரூபாய்க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி ஆயிரத்து 100 ரூபாய் அதிகரித்து 73 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
Discussion about this post