பெரம்பலூரில் குடிசை மாற்றுவாரியம் மூலம் 41 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 504 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்புக்கான கட்டுமானப் பணிகள் தூரிதமாக நடைபெற்று வருவதையடுத்து மத்திய மாநில அரசுகளுக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர். மத்திய அரசு பிரதமரின் வீட்டுவசதி திட்டத்தின் கீழ், வீடற்ற ஏழை மக்கள் அனைவருக்கும் 2022 ஆம் ஆண்டுக்குள் வீடுகள் கட்டுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தை மாநிலத்தில் செயல்படுத்த தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்றுவாரியத்தை மத்திய அரசு நியமித்துள்ளது.
அதன்படி பெரம்பலூரில் உள்ள கவுள்பாளையத்தில் 400 சதுர அடி பரப்பளவில் 41 கோடி ரூபாய் மதிப்பில், 504 குடியிருப்புகளுக்கான கட்டுமான பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளது. அடிப்படை வசதிகளான சாலை, குடிநீர், மின் இணைப்புகள், மழை நீர் வடிகால் வசதி உள்ளிட்ட பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதற்கான பணிகள் தூரிதமாக நடைபெற்று வருவதையடுத்து, இதற்கு உறுதுணையாக இருந்த நாடாளுமன்ற உறுப்பினர் மருதராஜாவுக்கும் மத்திய மாநில அரசுகளுக்கு சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.
Discussion about this post