கொரோனா சிகிச்சைக்கு பயன்படும் வகையில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 50 ஆயிரம் வெண்டிலேட்டர்களை பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு வழங்க உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதுவரை 2 ஆயிரத்து 923 வெண்டிலேட்டர்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவற்றில் ஆயிரத்து 340 வெண்டிலேட்டர்கள் ஏற்கெனவே மாநிலங்களுக்கு அனுப்பிய நிலையில் விரைவில் 50 ஆயிரத்திற்கும் அதிகமான வெண்டிலேட்டர்களை மாநிலங்களுக்கு வழங்க திட்டமிட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதற்காக பிரதமர் நிவாரண நிதியில் இருந்து, 2 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் நலனுக்காக ஆயிரம் கோடி ரூபாயை மாநில அரசுகளுக்கு வழங்கியுள்ளதாகவும், இதனை அவர்களின் உணவு, தங்குமிடம் உள்ளிட்டவைகளுக்காக பயன்படுத்த வேண்டுமென மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
Discussion about this post