வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து வரப்பட்ட 50 லட்ச ரூபாய் பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
குடியாத்தம் அடுத்த வேப்பூர் பகுதியில் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது குடியாத்தத்தில் இருந்து வேலூர் நோக்கிச் சென்று கொண்டிருந்த காரை மடக்கி சோதனை செய்ததில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச்செல்லப்பட்ட 50 லட்ச ரூபாய் பணம் சிக்கியது.
இதையடுத்து பறக்கும் படையினர் பணத்தை பறிமுதல் செய்து தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைத்தனர். பின்னர் நடந்த விசாரணையில் அந்தப் பணம் தனியார் வங்கிக்கு சொந்தமானது என்பது தெரிய வந்தது. இதையடுத்து பணத்தை எடுத்து வந்தவர்களுக்கு அறிவுரை கூறிய அதிகாரிகள் உரிய ஆவணங்கள் கிடைத்தவுடன் பணத்தை திருப்பி அளித்தனர்.
Discussion about this post