டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக தேசிய தலைவர் அமித்ஷா, பாஜக ஆட்சியில் மக்கள் பாதுகாப்பாக இருப்பதாக உணர்ந்தார்கள் என்றார். மோடி அரசு கடந்த 5 ஆண்டுகளில் 133 திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளதாக கூறிய அவர், பெண்கள், ஏழைகள், விவசாயிகள் முன்னேற்றம் ஆகியவை பாஜகவின் முக்கிய நோக்கமாக இருந்தது என்றார். பிரதமர் மோடியின் திட்டங்களால் 50 கோடி ஏழை மக்கள் பயன் அடைந்துள்ளதாகவும் இதன் மூலம் 7 மாநிலங்களில் மட்டுமே ஆட்சியில் இருந்த பாஜக, தற்போது 23 மாநிலங்களில் ஆட்சியில் இருப்பதாகவும் அமித்ஷா சுட்டிக்காட்டினார். குடிநீர், மின்சாரம், எரிவாயு உள்ளிட்டவைகள் நாட்டில் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் சென்றடைந்துள்ளதாக பெருமிதத்துடன் கூறினார். மேலும் சர்வதேச அளவில் இந்தியாவின் மதிப்பை, மோடி தலைமையிலான அரசு வெகுவாக உயர்த்தியுள்ளதாகவும் அமித்ஷா குறிப்பிட்டார்
Discussion about this post