யார் பிரதமர் வேட்பாளர் என்றே தெரியாதவர்களுக்கு வாக்களிப்பீர்களா? அல்லது 5 ஆண்டுகள் நல்லாட்சி தந்த பாஜக கூட்டணிக்கு வாக்களிப்பீர்களா? என தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கேள்வி எழுப்பியுள்ளார். கடலூர் நாடாளுமன்ற தொகுதியின் பாமக வேட்பாளராக போட்டியிடும் கோவிந்தசாமியை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்ட அவர், மக்கள் தெளிவாக சிந்தித்து வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
Discussion about this post