சென்னை மண்ணிவாக்கத்தை சேர்ந்த 5 வயது சிறுமி, மிகச்சிறிய வயதில் அபாகசின் அனைத்து படிநிலைகளையும் வென்ற குழந்தை என்று ஹைரேஞ்ச் என்ற உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளார்.
சென்னை தாம்பரத்தை அடுத்த மண்ணிவாக்கத்தில் தனியார் நிறுவன ஊழியர் ஆறுமுகராஜ் -கவிதா தம்பதிகளின் மகள் கலைமதி அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 1ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் தனது மூன்றரை வயதில் அபாகசில் சேர்ந்து மிகக்குறுகிய காலத்தில் தேசிய அளவுகளில் வெற்றி பெற்று சாதனை புரிந்துள்ளார்.
இந்த சிறிய வயதிலே அபாகசில் உள்ள எட்டு படிநிலைகளிலும் அவர் தேர்ச்சி பெற்றுள்ளார். தற்போது இவரது திறனை ஹைரேஞ்ச் என்னும் உலக சாதனை புத்தகம் மிகச்சிறிய வயதில் அபாகசின் அனைத்து படிநிலைகளையும் வென்ற குழந்தை என பதிவு செய்து பாராட்டியுள்ளது.
Discussion about this post