பிப்ரவரி மாதம் பிறந்தாலே காதலர் தினம் தான் அனைவருக்கும் நினைவிற்கு வரும்.அதும் காதலர்களுக்கு சொல்லவே வேணாம், பிப்ரவரி 14 அன்று எவ்வாறு கொண்டாடலாம் என பிளான் செய்து கொண்டு இருப்பார்கள்.தற்போது காதலர் தினத்தை சிறப்பாக கொண்டாடுவதற்கு உங்களுக்கான டிப்ஸ் இதோ……
1.பிப்ரவரி 13 அதாவது இன்று உங்கள் காதலியுடன் பேசாமல் அவருடன் சண்டையிடுங்கள்,அவரை கண்டுக்காமல் நடியுங்கள். பின்பு பிப்ரவரி 14 இரவு 12 மணிக்கு போன் பண்ணி அவங்க உங்க லைஃப்ல எவ்ளோ முக்கியம் என புரிய வையுங்கள்.இதுவரை நீண்ட நாள் சொல்ல வேண்டும் என்று நினைத்து சொல்லாமல் போன விஷயத்தை கூறுங்கள். நீங்கள் கூறிய பிறகு நிச்சயமாக உங்கள் இருவரின் உறவும் முன்பு இருந்ததை விட மிக அழகாக தோன்றும்.
2.காதலர் தினம் அன்று உங்கள் காதலிக்கு பிடிக்கும் படியாக நடந்துகொள்ளுங்கள்.காதல் வந்துவிட்டாலே நாம் நம்மை மறந்து அவர்களுக்காக வாழ தொடங்கி விடுவோம்.ஆனால், பிடிவாதமாக சில விஷயங்களை மாற்றி கொள்ளாமல் இருந்து இருப்பீர்கள்,அதையும் அவர்களுக்காக மாற்றி கொண்டால், அவர்கள் உங்களுக்கு எந்த அளவு முக்கியம் என்பதை எளிதாக புரிய வைக்க முடியும்.
3.பெண்கள் என்றாலே அதிகமாக எதிர்ப்பார்ப்பார்கள் அதிலும் காதலிப்பவர்களிடம் சொல்லவே தேவையில்லை.விலை உயர்ந்த பொருட்களை பெண்கள் விரும்புவார்கள் என்பது தவறு.அன்பு நிறைந்த பொருட்களை தான் மிகவும் நேசிப்பார்கள்.அனைத்து பெண்களுக்கும் நிறைவேறாத ஆசை என சில விஷயங்கள் இருக்கும்,சில என்பதை விட பட்டியலே வைத்து இருப்பார்கள். அதை நிறைவேற்றுவது நீங்களாக இருந்தால் உங்கள் மீது உள்ள காதலுடன் சற்று மரியாதையும் அதிகரிக்கும்.
4. பெண்ணானவள் அப்பாவை தவிற வேறு எந்த ஆணிடமும் நெருங்கி பழகாதவள், உங்கள் மீது மிகவும் நம்பிக்கை வைத்ததனால் மட்டுமே தன் காதலை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறாள். அந்த நம்பிக்கையை வாழ்வின் இறுதி தருணம் வரை காப்பாற்றுங்கள். நான் உனக்கானவன் என்று ஒவ்வொரு நொடியும் நீங்கள் தரும் நம்பிக்கை வாழ்வின் எந்த சவாலையும் உங்கள் காதலியால் சந்திக்க முடியும்
5.பூங்கா,சினிமா,கடற்கரை என்பது அனைவரும் தங்கள் காதலியை அழைத்து செல்லும் இடம் தான் .நீங்கள் சற்றே வித்தியாசமாக உங்கள் காதலியை அருகிலுள்ள கோயிலுக்கு அல்லது காப்பகங்களுக்கு அழைத்து சென்று அவர்கள் கையால் அங்கு இருப்பவர்களுக்கு உணவளிக்க வையுங்கள்.இது நிச்சயமாக அவர்களுக்கு மிகவும் சந்தோஷம் நிறைந்த தருணமாக அமையும். ஏனென்றால், பரிசு பொருட்களால் மட்டுமே ஒருவரை மகிழ்விக்க முடியாது.நாம் கூறும் வார்த்தைகளாலும்,அன்பான செயல்களாலும் கூட அவர்களை மகிழ்வின் உச்சத்திற்கு அழைத்து செல்ல முடியும்.