அதானி குழுமத்தின் முறைகேடு குறித்து ஹிண்டன்பர்க் அறிக்கை வெளியான பின் அதானி குழுமத்தின் பங்குகள் பெருமளவு சரிந்துள்ளன. இதனையடுத்து அதானி குழுமத்திற்கு வழங்கப்பட்ட ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஒரு மீட்டரின் விலை 10 ஆயிரம் என்று கூறி அதானி டிரான்ஸ்மிஷன் நிறுவனம் ஏலத்தில் இந்த ஒப்பந்த புள்ளியை எடுத்தது. இந்த ஏலத்தில் மற்ற நிறுவனங்களும் கலந்து கொண்ட நிலையில், மற்ற நிறுவனங்களை காட்டிலும் மிக குறைந்த விலையில் அதானி குழுமத்தின் ஒப்பந்த விலை இருந்ததால், இந்த ஒப்பந்தத்தை அதானி குழுமத்திற்கு உத்திரபிரதேச அரசு வழங்கியது. இந்நிலையில் மிக குறைந்த விலைக்கு எடுத்த அதானி குழுமத்தின் ஒப்பந்தத்தை தவிர்க்க முடியாத சில காரணங்களினால் ரத்து செய்வதாக உத்தரபிரதேச மின்வாரியம் தெரிவித்துள்ளது.
Discussion about this post