சாத்தான்குளம் வழக்கில், காவலர் முத்துராஜுக்கு மேலும் ஒருநாள் சி.பி.ஐ. காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆய்வாளர் ஸ்ரீதர் உட்பட 4 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
சாத்தான்குளம் தந்தை, மகன் உயிரிழந்த வழக்கை விசாரித்து வந்த சி.பி.சி.ஐ.டி போலீசார், காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உட்பட 10 பேரை கைது செய்தனர். இந்த வழக்கு தற்போது சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டதையடுத்து, முதலில் கைது செய்யப்பட்ட 5 பேரை காவலில் எடுத்து சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். சாத்தான்குளம் காவல்நிலையம், பென்னிக்சின் செல்போன் கடை உள்ளிட்ட இடங்களுக்கு 5 பேரையும் அழைத்துச் சென்று சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இந்த வழக்கில், 5 பேரின் சி.பி.ஐ. காவல் இன்றுடன் முடிவடைந்த நிலையில், அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். காவலர் முத்துராஜுக்கு மட்டும் மேலும் ஒருநாள் சி.பி.ஐ. காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆய்வாளர் ஸ்ரீதர் உட்பட மற்ற 4 பேரையும், ஜுலை 30ம் தேதி வரை, நீதிமன்றக் காவலில் வைக்க மதுரை மாவட்ட குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, 4 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
Discussion about this post