சென்னையில் பல்வேறு இடங்களில் செல்போன் பறிப்பில் ஈடுபட்டு வந்த 5 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை அபிராமபுரம் பகுதியில் தொடர்ச்சியாக மர்ம கும்பல் ஒன்று செல்போன் பறிப்பில் ஈடுபட்டு வந்த நிலையில், அப்பகுதியில் கிடைத்த சிசிடிவி காட்சிகள் உதவியோடு போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் சிசிடிவியில் பதிவான வழிப்பறி செய்த மர்ம கும்பலின் அடையாளம் தெரிய வந்ததை தொடர்ந்து, அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
திருட்டு மற்றும் வழிபறி வழக்குகளில் தொடர்புடையவர்களான கல்லறையை சேர்ந்த ராஜன், காவாங்கரையை சேர்ந்த ஜோஸ்வா, புரசைவாக்கத்தை சேர்ந்த அஜித்குமார், பெரம்பூரை சேர்ந்த குமரகுரு மற்றும் திருவல்லிக்கேணியை சேர்ந்த தினேஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து இரண்டு இருச்சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
Discussion about this post