கேரளாவில் மேலும் 5 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ஷைலஜா தெரிவித்துள்ளார்.
சீனாவின் வூகான் மாகாணத்தில் உருவான ஆட்கொல்லி நோயான கொரோனா வைரஸ், உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. இந்த நிலையில் கேரள மாநிலத்தில் மேலும் 5 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இத்தாலியில் இருந்து அண்மையில் சொந்த ஊர் திரும்பிய 3 பேர் உட்பட 5 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அரசு மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்ட பிரிவில் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது எனவும் கேரள சுகாதாரத்துறை அமைச்சர் ஷைலாஜா தெரிவித்துள்ளார். கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட 5 பேரும் கேரளாவின் பத்தினம்திட்டா மாவட்டத்தை சேர்ந்தவர்கள் ஆவர்.
Discussion about this post