இந்தியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் 5வது நாள் ஆட்டமும் மழையால் தாமதமாகியுள்ளது.
இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான 4வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் நடைபெற்று வருகிறது. முதலில் பேட் செய்த இந்திய அணி, புஜாரா, மற்றும் ரிஷாப் பண்ட் ஆகியோரின் அபார சதத்தால் 7 விக்கெட் இழப்புக்கு 622 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. தொடர்ந்து விளையாடிய ஆஸ்திரேலிய அணி இந்திய வீரர்களின் பந்து வீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக மார்கஸ் ஹாரிஸ் 79 ரன்கள் எடுத்தார். மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலியா 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
104 புள்ளி 4 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த ஆஸ்திரேலியா 300 ரன்களையே எடுத்தது. இந்திய வீரர் குல்தீப் யாதவ் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். 322 ரன்கள் பின் தங்கிய, ஆஸ்திரேலியா ஃபாலோ ஆன் ஆனது. 30 ஆண்டுகளுக்கு பிறகு ஆஸ்திரேலியா தனது சொந்த மண்ணில் ஃபாலோ ஆன் ஆனது. இதைத்தொடர்ந்து ஆஸ்திரேலிய அணி 2வது இன்னிங்சை விளையாட தொடங்கியது. 6 ரன்கள் எடுத்திருந்த போது மோசமான வானிலை காரணமாக 4ஆம் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. இந்தநிலையில், 5ஆம் நாள் ஆட்டம் மழை காரணமாக பாதிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post