காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் அளவு குறைந்ததால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து மூன்று நாட்களாக 4 ஆயிரத்து 843 கனஅடியாக நீடித்து வருகிறது.
கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு குறைந்ததாலும், காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் அளவு குறைந்ததாலும், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து 4 ஆயிரத்து 843 கனஅடியாக நீடித்து வருகிறது. காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 120 அடியாகவும் அணையின் நீர் இருப்பு 93 புள்ளி 47 டி.எம்.சி-யாகவும் உள்ளது. அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு 4 ஆயிரம் கனஅடி நீரும், கிழக்கு ,மேற்கு கால்வாய் பாசனத்திற்கு 600 கன அடி நீரும் திறந்து விடப்படுகிறது.
Discussion about this post