இரண்டாவது கட்ட மெட்ரோ ரயில் பணிக்காக ஜப்பான் நிறுவனம் 4 ஆயிரத்து 760 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்துள்ளது.2008 ஆம் ஆண்டு ஜப்பானின் ஜே.ஐ.சி.ஏ நிறுவனம், சென்னையில் மெட்ரோ ரயில் முதற்கட்ட பணிக்காக 11ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்தது.
தற்போது இரண்டாம் கட்ட பணிக்காக 4 ஆயிரத்து 760 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது.இதற்கான ஒப்பந்தத்தில் மத்திய நிதித்துறை அமைச்சகம் மற்றும் ஜப்பானின் ஜே.ஐ.சி.ஏ கையெழுத்திட்டன. இதன்மூலம் மாதவரம்-சிப்காட்,மாதவரம- சோழிங்கநல்லூர், சிஎம்பிடி-லைட் ஹவுஸ் ஆகிய தடங்களில் 107 கிலோ மீட்டர் தூரத்திற்கு மெட்ரோ பணிகள் நடைபெற உள்ளன.
முதற்கட்டமாக இந்தப் பணிகளுக்கு 83 கோடி ரூபாய் வழங்கப்பட உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.சென்னையில் பெருகி வரும் மக்கள் தொகையால் ஏற்படும் மாசு மற்றும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் விதமாக மெட்ரோ ரயில் பணிக்கு நிதிக்கு ஒதுக்கீடு செய்துள்ளதாகவும் மத்திய நிதித்துறை அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.
Discussion about this post