இந்த உலகம் மூன்றில் ஒரு பங்கு நீரினால் சூழப்பட்டது.இந்தியா முன்று பக்கமும் நீரினால் சூழப்பட்டது. பழந்தமிழர்கள் நீர்மேலாண்மையில் வல்லவர்களாக இருந்ததை வரலாறு நமக்கு கற்பிக்கிறது.நீர்நிலைகளிலும் பல்வேறு வகைகளை பயண்படுத்தியிருக்கிறார்கள். அவையாவன,
47 வகையான நீர்நிலைகள்
- *அகழி* – (Moat) கோட்டையின் புறத்தே அகழ்ந்தமைக்கப்பட்ட நீர் அரண்.
- *அருவி* – (Water fall) மலை முகட்டில் தேங்கிய நீர் குத்திட்டு விழுவது.
- *ஆழிக்கிணறு* – (Well in Seashore)கடலுக்கு அருகே தோண்டி கட்டிய கிணறு
- *ஆறு* – (River) – பெருகி ஓடும் நதி.
- *இலஞ்சி* -(Reservoir for drinking and other purposes)பல வகைக்கும் பயன்படும் நீர் தேக்கம்.
- *உறை கிணறு* -(Ring Well)மணற்பாங்கான இடத்தில் தோண்டி சுடுமண் வலையமிட்ட கிணறு.
- *ஊருணி* -(Drinking water tank)மக்கள் பருகும் நீர் நிலை.
- *ஊற்று* – (Spring) பூமிக்கடியிலிருந்து நீர் ஊறுவது.
- *ஏரி* -( Irrigation Tank) வேளாண்மை பாசன நீர் தேக்கம்.
- *ஓடை* (Brook) அடியிலிருந்து ஊற்று எடுக்கும் நீர் – எப்பொழுதும் வாய்க்கால் வழி ஓடும் நீர்.
11 *கட்டுந் கிணக்கிணறு* (Built-in -well) – சரளை நிலத்தில் வெட்டி, கல், செங்கல் இவைகளால் சுவர்கட்டிய கிணறு.
- *கடல்* – (Sea) சமுத்திரம்.
- *கம்வாய் (கம்மாய்)* -(Irrigation Tank) பாண்டிய மண்டலத்தில் ஏரிக்கு வழங்கும் பெயர்.
- *கலிங்கு* – (Sluice with many Ventures)ஏரி முதலிய பாசன நீர் தேக்கம் உடைப்பெடுக்காமல் இருப்பதற்கு முன் எச்சரிக்கையாக கற்களால் உறுதியாக்கப்பட்ட பலகைகளால் அடைத்து திறக்கக்கூடியதாய் உள்ள நீர் செல்லும் அமைப்பு.
- *கால்* – (Channel) நீரோடும் வழி.
- *கால்வாய்* – (Supply channel to a tank ) ஏரி, குளம் ஊருணி இவற்றிக்கு நீர் ஊட்டும் வழி.
- *குட்டம்* – (Large Pond) பெருங் குட்டை.
- *குட்டை* – (Small Pond) சிறிய குட்டம். மாடு முதலியன் குளிப்பாட்டும் நீர் நிலை.
- *குண்டம்* – (Small Pool) சிறியதாக அமைந்த குளிக்கும் நீர் நிலை.
- *குண்டு* – (Pool) குளிப்பதற்கேற்ற ஒரு சிறு குளம்.
- *குமிழி* – (Rock cut Well) நிலத்தின் பாறையை குடைந்து அடி ஊற்றை மேலெழுப்பி வரச்செய்த குடை கிணறு.
- *குமிழி ஊற்று* – (Artesian fountain)-அடி நிலத்து நீர் நிலமட்டத்திற்கு கொப்பளித்து வரும் ஊற்று
23 . *குளம்* – (Bathing tank) ஊர் அருகே உள்ள மக்கள் குளிக்கப்பயன்படும் நீர் நிலை.
- *கூவம்* – (Abnormal well) ஒரு ஒழுங்கில் அமையாத கிணறு.
25 . *கூவல்* – (Hollow) ஆழமற்ற கிணறு போன்ற பள்ளம்.
- *வாளி* (strea |m) ஆற்று நீர் தன் ஊற்று நீரால் நிரப்பி மறுகால்வழி அதிக நீர் வெளிச் செல்லுமாறு அமைந்த அல்லது அமைக்கப்பட்ட நீர்நிலை.
- *கேணி* –( large well) அகலமும், ஆழமும் உள்ள ஒரு பெருங் கிணறு.
- *சிறை* – (Reservoir) தேக்கப்பட்ட பெரிய நீர் நிலை.
- *சுனை* – (Mountain Pool ) மலையிடத்து இயல்பாயமைந்த நீர் நிலை.
- *சேங்கை* – (Tank with duck weed) பாசிக்கொடி மண்டிய குளம்.
- *தடம்* – (Beautifully constructed bathing tank)அழகாக் நாற்பபுறமும் கட்டப்பட்ட குளம்.
32 . *தளிக்குளம்* – (tank surrounding a temple) கோயிலின் நாற்புறமும் சூழ்ந்தமைந்த அகழி போன்ற் நீர் நிலை.
- *தாங்கல்* – (Irrigation tank) இப்பெயர் தொண்ட மண்டலத்தை ஒட்டிய பகுதியில் ஏரியை குறிக்கும்.
- *திருக்குளம்* – (Temple tank) கோயிலின் அணித்தே அமைந்த நீராடும் குளம். இது புட்கரணி எனவும் பெயர் பெறும்.
- *தெப்பக்குளம்* -(Temple tank with inside pathway along parapet wall)ஆளோடியுடன் கூடிய, தெப்பம் சுற்றி வரும் குளம்.
- *தொடு கிணறு* – (Dig well) ஆற்றில் அவ்வொப்பொழுது மணலைத்தோண்டி நீர் கொள்ளும் இடம்.
- *நடை கேணி* – (Large well with steps on one side) இறங்கிச் செல்லும் படிக்கட்டமைந்த பெருங் கிணறு.
- *நீராவி* – (Bigger tank at the center of Building hall) மைய மண்டபத்துடன் கூடிய பெருங்குளம். ஆவி என்றும் கூறப்படும்.
- *பிள்ளைக்கிணறு* -(Well in middle of a tank) குளம் ஏரியின் நடுவே அமைந்த கிணறு.
- *பொங்கு கிணறு* – (Well with bubbling spring) ஊற்றுக்கால் கொப்பளித்துக்கொண்டே இருக்கும் கிணறு.
- *பொய்கை* – (Lake) தாமரை முதலியன மண்டிக்கிடக்கும் இயற்கையாய் அமைந்த நீண்டதொரு நீர் நிலை.
- *மடு* – (Deep place in a river) ஆற்றிடையுடைய அபாயமான பள்ளம்.
- *மடை* – (Small sluice with single venturi) ஒரு கண்ணே உள்ள சிறு மதகு.
- *மதகு* – (Sluice with many ventures) பல கண்ணுள்ள ஏரி நீர் வெளிப்படும் பெரிய மடை அடைப்பும் திறப்பும் உள்ளது.
- *மறு கால்* – (Surplus water channel) அதிக நீர் கழிக்கப்படும் பெரிய வாய்க்கால்.
- *வலயம்* – (Round tank) வட்டமாய் அமைந்த குளம்.
47 *வாய்ககால்* – (Small water course) ஏரி முதலிய நீர் நிலைகள்.
*47 வகை நீர் நிலைகளையும் தன் சுயநலத்திற்காக அழித்தால் மனித எதிர் காலம் எங்கே..?*
ஒவ்வொன்றையும் தேடி கண்டுபிடிப்பதும் தெரிந்து கொள்வதும் நடவாது. பெயர்களையாவது அந்த அளவில் தெரிந்து கொள்வோம்
Discussion about this post