விழுப்புரம் மாவட்டத்தில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் உரிய ஆவணமின்றி எடுத்துவரப்பட்ட 44 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்துள்ளனர். பறக்கும்படையினரின் சோதனையில், தலைவாசல் பகுதியை சேர்ந்த அழகுவேல்பாபு என்ற பயணி பேருந்தில் முறையான ஆவணமின்றி பணம் எடுத்து சென்றது தெரியவந்தது. இதனையடுத்து அவரிடம் பணம் பறிமுதல் செய்யப்பட்டு தேர்தல் நடத்தும் அலுவலர்கள் விசாரணை நடைபெற்று வருகிறது.
Discussion about this post