சென்னை புத்தக காட்சியில் வைக்கப்பட்ட கீழடி தொல்பொருள் சிறப்பு கண்காட்சியில், கீழடி அகழாய்வு நூல் 23 ஆயிரம் பிரதிகளுக்கு மேல் விற்பனையாகி சாதனை படைத்துள்ளது.
43-வது சென்னை புத்தக காட்சி, ஜனவரி 9ஆம் தேதி தொடங்கி முதல் 21ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்த கண்காட்சியில், கீழடி அகழாய்வு குறித்த நூல், தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட 24 மொழிகளில் வெளியிடப்பட்டு விற்பனை செய்யப்பட்டது. இதில், கீழடி அகழாய்வு நூல் 23 ஆயிரம் பிரதிகளுக்கு மேல் விற்பனை செய்யப்பட்டு சாதனை படைத்துள்ளது. தமிழ், ஆங்கிலம் மட்டுமன்றி மலையாளம், ஹிந்தி, சமஸ்கிருதம், ஜப்பானியம், அரபி மற்றும் கொரிய மொழிகளில் மொழி பெயர்ப்பு செய்யப்பட்டு நூல்கள் விற்பனை செய்யப்பட்டன. இந்த கண்காட்சியில் இடம் பெற்ற கீழடி அகழாய்வு குறித்த மாதிரிகள், வான்வெளிப் பார்வை மாதிரி, தொல் பொருட்களின் முப்பரிமாண வடிவம் அடங்கிய மெய்நிகர் காட்சியகம் பொதுமக்களின் பேராதரவை பெற்றது என தமிழக செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை தெரிவித்துள்ளது.
Discussion about this post