தமிழகத்தில் மேலும் 4 ஆயிரத்து 329 பேருக்கு, கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து இரண்டாயிரத்து 721 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
மேலும் 4 ஆயிரத்து 329 பேருக்கு நோய் தொற்று ஏற்பட்டுள்ளதாகவும், இதில் 2 ஆயிரத்து 621 பேர் ஆண்கள் என்றும், ஆயிரத்து 708 பேர் பெண்கள் என்றும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
சென்னையை பொறுத்தவரையில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 64 ஆயிரத்து 689 ஆக உயர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து ஒரே நாளில் 2ஆயிரத்து 357 பேர் குணமடைந்துள்ளதால், மீண்டோர் எண்ணிக்கை 58 ஆயிரத்து 378 ஆக அதிகரித்துள்ளது. சிகிச்சையில் உள்ளோரின் எண்ணிக்கை 42 ஆயிரத்து 955 ஆக உள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தோர் விகிதம் 57 சதவீதமாக உள்ளது என்றும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.சென்னை தவிர பிற மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. அதன்படி, மதுரை மாவட்டத்தில் 287 பேரும், செங்கல்பட்டில் 330 பேரும், திருவள்ளூரில் 172 பேரும், திருவண்ணாமலையில் 151 பேரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
Discussion about this post