42 ஆண்டுகளுக்கு முன்னர் திருடப்பட்ட இராமர், இலட்சுமணர், சீதை சிலைகள் லண்டனில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இலண்டனில் உள்ள வணிகர் ஒருவர், சிலைகள் விற்பனைக்கு இருப்பதாக, இணையதளத்தில் சுவாமி சிலைகளின் படங்களை வெளியிட்டார். இதுகுறித்து சிங்கப்பூரில் உள்ள ஒருவர், தமிழக சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸ் பிரிவுக்கு தகவல் அளித்தார். அதைத் தொடர்ந்து, சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவினர், இலண்டன் அரசிடம் முறையிட்டு மூன்று சிலைகளையும் மீட்டுள்ளனர்.
தொடர்ந்து, மீட்கப்பட்ட சிலைகளை தமிழகத்துக்கு கொண்டுவரும் பணியில், இந்திய தொல்லியல் துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இலண்டனிலிருந்து மீட்கப்பட்ட சிலைகள், மயிலாடுதுறை அனந்தமங்கலம் கோயிலிலிருந்து, 1978ஆம் ஆண்டு திருடப்பட்ட சிலைகள் என்பதை சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார் உறுதிசெய்தனர்.
இந்த சிலைகள் அனைத்தும் விஜயநகர அரசுக் காலத்தைச் சேர்ந்தவை என்பது விசாரணையில் தெரியவந்ததுள்ளது.
Discussion about this post