நிலத்தடி நீரை முறையாக பராமரிக்காவிட்டால் 2030-க்குள் இந்தியாவில் 40 சதவீத மக்களுக்கு குடிநீர் கிடைக்காமல் போகும் அபாயம் இருப்பதாக நிதி ஆயோக் எச்சரித்துள்ளது.
இது தொடர்பாக நிதி ஆயோக் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை, டெல்லி, பெங்களூர், ஹைதாராபாத் உள்ளிட்ட 21 நகரங்களில் அடுத்த ஆண்டிற்குள் நிலத்தடி நீர் முற்றிலும் தீர்ந்து போகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கடல்நீரைக் குடிநீராக்க அதிக செலவு பிடிக்கும் என்றும் பொதுமக்கள் மழைநீர் சேகரிப்பில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மற்ற நகரங்களை விட சென்னையில் அதிக மழைப் பொழிவு இருந்த போதிலும் 3 ஆறுகள், 4 நீர் நிலைகள், ஈர நிலங்கள் மற்றும் வனப்பகுதிகள் முற்றிலும் வறண்டு போயுள்ளதாக நிதி ஆயோக் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. நிலத்தடி நீரைப் பாதுகாக்க அரசாங்கமும் மக்களும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டியது அவசியம் என்றும் நிதி ஆயோக் அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post