பழைய மகாபலிபுரம் சாலையில் ஏகாட்டூர் பகுதியில் மசாஜ் சென்டரில் புகுந்த இளைஞர்கள் கத்திமுனையில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் கேளம்பாக்கம் பழைய மகாபலிபுரம் சாலையில் ஏகாட்டூர் என்ற பகுதியில் சைன் ஆயுர்வேதிக் மசாஜ் சென்டர் உள்ளது . கடந்த 28ம் தேதியன்று 18, 19 வயது கொண்ட ஐந்து வாலிபர்கள் மசாஜ் கிளப்பில் உள்ளே நுழைந்து அங்கு இருந்த பெண்களிடம் கத்தியை காட்டி மிரட்டி அவர்களை தாக்கி பணம், செல்போன்கள், நகைகள் உள்ளிட்டவைகளை பறித்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த முதல் நிலை காவலர்கள் ரமேஷ் , ராஜேஷ் ஆகியோர் விரைந்து செயல்பட்டு வழிப்பறி செய்ய வந்த 5 வாலிபர்களை மடக்கிப் பிடித்தனர். அதில் விஜய் பிரபாகரன் , அஜய், சசிகுமார்,
ஜெகதீசன் ஆகிய நான்கு இளம் வாலிபர்களை அதிரடியாக கைது செய்தனர். வினோத் என்பவன் தப்பி ஓட்டம். அவனை தேடும் பணியில் கேளம்பாக்கம் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர். மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள இந்த சாலையில் பட்டாக்கத்தியுடன் 5 வாலிபர்கள் பெண்களை தாக்கி நகை மற்றும் பணம் கொள்ளை அடிக்க முயன்றது இந்த பகுதியில் பெரிய அதிர்ச்சியை உண்டாக்கியது.இதன் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.
Discussion about this post