அம்பத்தூரில் 4 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக முன்னாள் ராணுவ வீரரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை திருமுல்லைவாயில் காவல் நிலையம் அருகே ராஜேந்திரன் என்பவர் தனது மனைவி செல்வி, மகன் மற்றும் மகளுடன் வசித்து வருகிறார். தனது மகனை டியூசனுக்கு அழைத்து சென்ற செல்வி, வீடு திரும்பியதும் மகளை காணாது அதிர்ச்சியடைந்தார். இது தொடர்பாக தனது கணவருக்கு அவர் தகவல் தெரிவித்தார். இருவரும் குழந்தையை பல்வேறு இடங்களில் தேடினர். மகள் கிடைக்காததால் போலீசாருக்கு தகவல் அளித்தனர். போலீசாரின் சோதனையில் ராஜேந்திரனின் பெரியப்பா மகனும் முன்னாள் ராணுவ வீரருமான மீனாட்சி சுந்தரத்தின் வீட்டின் கழிப்பறையில் மர்ம பை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதனை திறந்து பார்த்தபோது, உள்ளே சிறுமியின் உடல் திணிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது . இந்த விவகாரம் தொடர்பாக மீனாட்சி சுந்தரத்தை சந்தேகத்தின் பேரில் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே கொலை சம்பவம் தொடர்பாக கூடுதல் தடயத்தை கைப்பற்றியுள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post