கடல் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் சென்னை உள்ளிட்ட நான்கு இந்திய நகரங்கள் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக ஐநாவின் பருவநிலை மாற்றம் தொடர்பான அமைப்பு எச்சரித்துள்ளது.
கால நிலை மாறுபாடு குறித்து ஆய்வு செய்த ஐநாவின் பருவ நிலை மாற்றம் தொடர்பான அமைப்பு, ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி கொல்கத்தா, மும்பை, சூரத் மற்றும் சென்னை ஆகிய 4 கடலோர நகரங்கள் கடலில் மூழ்கும் அபாயம் உள்ளதாக எச்சரித்துள்ளது. இந்த நூற்றாண்டின் இறுதியில் இமயமலை வேகமாக உருகி கடல் நீர்மட்டம் வெகுவாக அதிகரிக்கும், இதனால் கடலோர நகரங்கள் நீரில் மூழ்குவதோடு, வட இந்தியாவின் பல பகுதிகளில் கடுமையான தண்ணீர் பஞ்சம் ஏற்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2100ம் ஆண்டில் உலக அளவில் 100 கோடிக்கும் மக்கள் பாதிக்கப்படுவார்கள் எனவும், இந்திய 4 கடற்கரை மாவட்டங்கள் மட்டுமின்றி உலக அளவில் 45 துறைமுகநகரங்கள் பாதிக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post