6 ஆயிரத்து 491 பணியிடங்களுக்கான குரூப்-4 தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று டி.என்.பி.எஸ்.சி நிர்வாகம் அறிவித்துள்ளது.
தமிழக அரசு பணிகளுக்கான தேர்வினை டி.என்.பி.எஸ்.சி என்னும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தி வருகிறது. இந்நிலையில் தமிழ்நாடு அமைச்சகப்பணி, நீதித்துறை, நில ஆவணம் மற்றும் நில அளவைத்துறை, தலைமைச் செயலகப்பணி, சட்டமன்ற பணிகளில் காலியாக உள்ள 6 ஆயிரத்து 491 பணியிடங்களுக்கான குரூப்-4 தேர்வுக்கு டி.என்.பி.எஸ்.சி அழைப்பு விடுத்துள்ளது. இன்று முதல் வரும் ஜுலை 14ஆம் தேதிக்குள் www.tnpscexams.in என்ற இணையத்தின் மூலம் விண்ணபிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் பதிவிற்கு 150 ரூபாயும் தேர்வு கட்டணமாக 100 ரூபாயும் செலுத்த வேண்டும் என குறிப்பிட்டிருக்கும் டி.என்.பி.எஸ்.சி, தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர், மாற்றுத்திறனாளிகள் இந்த கட்டணத்தை செலுத்த வேண்டாம் என அறிவித்துள்ளது. கிராம நிர்வாக அதிகாரி, இளநிலை உதவியாளர், பில் கலெக்டர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு குரூப் 4 தேர்வு நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post