திருவண்ணாமலை – மணலூர்பேட்டை சாலை மாரியம்மன் கோவில் 10வது தெருவில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி ஏடிஎம் உள்ளிட்ட நான்கு ஏடிஎம் இயந்திரங்களை உடைத்து மர்ம நபர்கள் 70 லட்சம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர். கேஸ் வெல்டிங் இயந்திரம் மூலம் உடைத்ததால் நான்கு ஏடிஎம் இயந்திரங்களும் எரிந்து சேதமடைந்துள்ளது. தகவல் அறிந்து சென்ற காவல்துறையினர் தடயவியல் நிபுணர்களை கொண்டு ஆய்வு மேற்கொண்டனர். மேலும் நான்கு ஏடிஎம் இயந்திரங்களையும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட சென்னைக்கு கொண்டு செல்ல உள்ளதாகவும் காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து காவல்துறையினர் சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். விடியா திமுக ஆட்சியில் நடைபெறும் தொடர் கொள்ளை சம்பவத்தால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
Discussion about this post