4 லட்சம் இந்தியர்களில் கிரெடிட் மற்றும் டெபிட் கார்ட் விபரங்கள் DARK NET-ல் விற்பனைக்கு உள்ளதாக குரூப் ஐபி தெரிவித்துள்ளதால், கலக்கம் ஏற்பட்டுள்ளது.
சிங்கப்பூரை தலைமையாக கொண்ட சைபர் செக்யூரிட்டி நிறுவனமான குரூப் ஐபி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், DARK NET-ல் பெரிய அளவில் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு விபரங்கள் திருட்டுத்தனமாக சேகரிக்கப்பட்டுள்ளதாகவும், இதில், 98 சதவிகிதத்திற்கும் அதிகமான இந்தியர்களின் தகவல்கள் உள்ளது என்றும் குரூப் ஐபி தெரிவித்துள்ளது. இதனால் கலக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த தகவல் குறித்து ஏற்கனவே குரூப் ஐபி இந்திய அதிகாரிகளுக்கு தெரிவித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது. தகவல்களை திருடி விற்கும் DARK NET-ன் மூலம் கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவில் அதிகரித்து வரும் phising மோசடிகளில் தரவுகள் சேகரிக்கப்பட்டுள்ளது குறித்து குரூப்-ஐபி நிறுவனம் கவனித்து வருவதாக தெரிவித்து உள்ளது.
Discussion about this post