இந்தியா-நியூஸிலாந்து அணிகள் மோதும் 3வது ஒருநாள் போட்டி மவுன்ட் மாங்கானுவில் இன்று நடைபெறுகிறது.
விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நேப்பியரில் நடந்த முதலாவது போட்டியில், 8 விக்கெட் வித்தியாசத்திலும், மவுன்ட் மாங்கானுவில் நடந்த 2வது போட்டியில், 90 ரன்கள் வித்தியாசத்திலும் இந்திய அணி வெற்றி பெற்று தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. 3வது ஒருநாள் போட்டி மவுன்ட் மாங்கானுவில் இன்று நடைபெறுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் வில்லியம்சன் பேட்டிங்கை தேர்வு செய்தார்.சற்றுமுன் ஆரம்பித்த இந்த போட்டியில் தசைப்பிடிப்பு காரணமாக தோனி விளையாடவில்லை. அவருக்கு பதிலாக ஹர்திக் பாண்டியா அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்
Discussion about this post