3-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி மேற்கு இந்தியத் தீவுகள் அணியிடம் தோல்வியை தழுவியது.
ஐந்து போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் இந்தியா மற்றும் மேற்கு இந்தியத் தீவுகள் அணி விளையாடி வருகிறது. முதல் போட்டியில் இந்தியா வெற்றி பெற்ற நிலையில், இரண்டாவது போட்டி சமனில் முடிந்தது.
இந்நிலையில் மூன்றாவது போட்டி புனேயில் நடந்தது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் கோலி பீல்டிங்கை தேர்வு செய்தார். முதலில் களமிறங்கிய மேற்கு இந்தியத் தீவுகள் அணி 50 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 283 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் வீரர் ஷாய் ஹோப் அதிகபட்சமாக 95 ரன்கள் குவித்தார்.
284 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 47 புள்ளி 4 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 240 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் 43 ரன்கள் வித்தியாசத்தில் மேற்கு இந்தியத் தீவுகள் அணி வெற்றி பெற்றது.
இந்திய அணியின் கேப்டன் கோலி இத்தொடரின் ஹாட்ரிக் சதத்தை இப்போட்டியில் பதிவு செய்தார்.
Discussion about this post