திருநெல்வேலி மாநகரில் போக்குவரத்து விதிகளை மீறுபவர்களிடமிருந்து, மின்னணு முறையில் அபராதம் வசூலிப்பதற்கு ஏதுவாக போக்குவரத்து காவலர்களுக்கு மின்னணு பண பரிவர்த்தனை கருவிகளை திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த ஆண்டு, ஜூலை மாதம் வரை திருநெல்வேலியில் போக்குவரத்து விதிகளை மீறியதாக 39 ஆயிரத்து 130 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறினார். இதன் மூலம், 42 லட்சத்து 15 ஆயிரம் ரூபாய் நேரடி அபராத தொகை வசூலிக்கப்பட்டுள்ளதாகவும், நீதிமன்றம் மூலம் 6 லட்சத்து 8 ஆயிரம் ரூபாய் வசூலிக்க பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Discussion about this post