சென்னையில் இதுவரை ஊரடங்கை மீறியதாக 33 ஆயிரத்து 663 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சென்னை மாநகர காவல்துறை ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். சென்னை வேப்பேரியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட 6 நாட்களில் விதிகளை மீறி வெளியே சுற்றித்திரிந்ததாக மொத்தம் 36 ஆயிரத்து 568 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 33 ஆயிரத்து 201 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். முகக் கவசம் அணியாமல் சமூக விலகலை கடைப்பிடிக்கால் சுற்றித் திரிந்ததாக 16 ஆயிரத்து 192 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். வண்ணாரப்பேட்டை துணை ஆணையர், கமாண்டோ படை வீரர்களுடன் விழிப்புணர்வுக்காகவே சென்றதாகவும், அது தவறாக புரிந்துக்கொள்ளப்பட்டதாகவும் தெரிவித்த காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன், மக்களின் ஒத்துழைப்பு சிறப்பாக இருப்பதால் சென்னையில் கமாண்டோ வீரர்களை பயன்படுத்த வேண்டுய அவசியமில்லை எனவும் தெரிவித்தார்.
Discussion about this post