தேசிய ஊரக குடிநீர் திட்டத்திற்காக 364 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய ஓ பன்னீர்செல்வம், குறைந்த பட்ச தேவைகள் திட்டத்திற்காக 286 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக சுட்டிக் காட்டினார். ஒருங்கிணைந்த சாலை கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்திற்காக 4 ஆயிரத்து 570 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
2019-20 நிதியாண்டில், ஆயிரத்து 986 கிலோ மீட்டர் நீளமுள்ள சாலைகளில் ஆயிரத்து 142 கோடி ரூபாய் செலவில் பணிகள் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் கூறினார். தமிழ்நாடு சாலை மேம்பாட்டு திட்டத்திற்காக 459 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.
Discussion about this post