திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் அணையில் இருந்து விவசாய பாசனத்திற்காக மாவட்ட ஆட்சியர் கந்தசாமி தண்ணீரை திறந்து வைத்தார். சாத்தனூர் அணையில் இருந்து இந்த ஆண்டிற்கான விவசாய பாசனத்திற்கு தண்ணீரை திறக்கக்கோரி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் விவசாயிகள் கோரிக்கை மனு அளித்திருந்தனர். இதனை ஏற்று அணையின் வலது மற்றும் இடது புற கால்வாயில் இருந்து வினாடிக்கு 150 கன அடி மற்றும் 200 கனஅடி மொத்தம் 350 கன அடி விதம் தண்ணீர் திறக்கப்படும் என்று முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டிருந்தார். இதன் அடிப்படையில் மாவட்ட ஆட்சியர் கந்தசாமி விவசாய பாசனத்திற்காக தண்ணீரை திறந்து விட்டார்
Discussion about this post