அமெரிக்க படைகளால் கொல்லப்பட்ட ஈரான் ராணுவ தளபதி குவாசிம் சுலைமானியின் இறுதி ஊர்வலத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 35 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஈரான் ராணுவ புரட்சி பாதுகாப்புப் படையின் குர்துஸ் படைப் பிரிவின் தளபதி குவாசிம் சுலைமானி சமீபத்தில் ஈராக் சென்றிருந்தார். அப்போது ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்தி அவரை அமெரிக்கா கொன்றது. கடந்த சில தினங்களாக அடுத்தடுத்து பல்வேறு சம்பவங்கள் நடந்து வருகின்றன. அதையடுத்து இரு நாடுகளுக்கும் இடையே போர் ஏற்படும் சூழ்நிலை உருவாகி உள்ளது. இதனிடையே, சுலைமானியின் இறுதி ஊர்வலம், அவரது சொந்த ஊரான கெர்மான் நகரில் நடந்தது. இதில் பல்லாயிரகணக்கானோர் திரண்டனர். அப்போது கூட்ட நெரிசல் ஏற்பட்டதில் 35 பேர் உயிரிழந்தனர். 48 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால், பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. இந்த நிலையில் வல்லரசு நாடுகளான அணுசக்தி ஒப்பந்தத்தை முழுமையாக ரத்து செய்வதாக ஈரான் அறிவித்துள்ளது. இதனால் மேற்காசியாவில் பதற்றம் அதிகரித்து காணப்படுகிறது.
Discussion about this post