கடந்த நான்கரை ஆண்டுகால பா.ஜ.க ஆட்சியில் எம்.பி.பி.எஸ் மற்றும் முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கு 31 ஆயிரம் இடங்கள் புதிதாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
பிரதான் மந்திரி பாரதிய ஜன் அவ்ஷாதி யோஜனா (pradhan mantri bhartiya jan aushadhi yojana) திட்ட பயனாளிகளுடன் பிரதமர் மோடி காணொளி காட்சி மூலம் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், கடந்த 5 ஆண்டுகளில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் 15 எய்ம்ஸ் மருத்துவமனைகள் அமைக்கப்பட்டிருப்பதாகவும், அதில் சிலவற்றின் கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதாகவும் கூறினார். இந்தநிலையில் எம்.பி.பி.எஸ் மற்றும் முதுநிலை மருத்துவ படிப்பில் புதிதாக 31 ஆயிரம் இடங்கள் உருவாக்கப்பட்டிருப்பதாக சுட்டிக் காட்டிய பிரதமர் மோடி, இந்த சாதனை வெறும் நான்கரை ஆண்டுகளில் நிகழ்த்தப்பட்டிருப்பதாக பெருமிதத்துடன் கூறினார்.
Discussion about this post