கேரளாவில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் இருந்து அழைத்து வரப்பட்ட 3 வயது சிறுவனுக்கு சிகிச்சை அளிக்க ஆலப்புழா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மறுப்பு தெரிவித்த நிலையில், அந்த சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான்.
கொரோனா பாதிப்பு காரணமாக தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் வசித்த 3 வயது சிறுவன், தவறுதலாக நாணயம் ஒன்றை விழுங்கியதால் மூச்சுவிடுவதில் சிரம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, சிறுவனை எர்ணாகுளம் அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்து சென்ற நிலையில், அங்கு நாணயத்தை வெளியில் எடுக்க முறையான சிகிச்சை அளிக்கப்பட வில்லையென கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து அந்த சிறுவனை ஆலப்புழா மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சென்றுள்ளனர். ஆனால் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் இருந்து வந்ததால் சிறுவனுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. உரிய மருத்துவ சிகிச்சை கிடைக்காத காரணத்தால் அந்த சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். இந்நிலையில், சிறுவனுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க மறுத்த மருத்துவமனை மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளவேண்டுமென புகார் எழுந்துள்ளது.
Discussion about this post