தஞ்சை மாவட்டம், கும்பகோணத்தில், தடை செய்யப்பட்ட 3 டன் பிளாஸ்டிக் பைகளை நகராட்சி நிர்வாகத்தினர் பறிமுதல் செய்தனர். தமிழகத்தில் பிளாஸ்டிக் பைகள் பயன்பாட்டிற்கு தமிழக அரசு தடை விதித்து உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து பிளாஸ்டிக் பயன்பாடு பெருமளவு குறைந்திருந்தன. ஆனால் சமீபகாலமாக மீண்டும் கும்பகோணம் நகரில் பிளாஸ்டிக் பைகளின் உபயோகம் அதிகளவு இருப்பதாக புகார் எழுந்தது. இதைத் தொடர்ந்து, நகராட்சி நிர்வாகத்தினர் ஏற்கனவே பிளாஸ்டிக் பைகள் விற்பனை செய்த இடங்களில் மீண்டும் சோதனையிட்டனர்.
அதில், ஒரு நிறுவனத்தில் மட்டும் சுமார் 3 டன் அளவிற்கு பிளாஸ்டிக் பைகள் இருப்பது தெரியவந்ததையடுத்து, நகராட்சி நிர்வாகத்தினர் அதனை பறிமுதல் செய்தனர். மேலும், பிளாஸ்டிக் பைகளை விற்பனை செய்த கடை உரிமையாளருக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர்.
Discussion about this post